10 வயதான செங் லீ (Cheng Lei) என்ற சிறுவன் சீனாவில் பிறந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தவர். இவர் சீனாவிற்கு வெளியே உள்ள அரசு ரகசியங்களை சட்டவிரோதமாக வெளிப்படுத்தியதாகவும், 10 வயதான செங் லீயை சீன அரசு கண்காணித்து வருவதாகவும் 2020-ல் ஆஸ்திரேலிய தூதரகம் அறிவித்திருந்தது. இதையடுத்து இது தொடர்பாக செங் லீயை விசாரணைக் காவலில் வைத்து விசாரித்து வருகிறது சீன அரசு.
மேலும் செங் லீ – யின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செங் லீயைச் சந்திக்கத் தடைவிதிக்கப்படுள்ளது. தற்போது செங் லீக்கு கடிதங்கள் மூலம் மட்டுமே தொடர்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரின் வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினர் விசாரணை குறித்து வெளியில் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறிய சீன அதிகாரிகள், இதுவரை விசாரணைக் குறித்து எந்த பதிலும் தெரிவிக்காமல் இருப்பதால் செங் லீயின் பெற்றோர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது பற்றிக் கூறிய ஆஸ்திரேலிய தூதர் கிரஹாம் பிளெட்சர் (Graham Fletcher, Australian Ambassador), “இது ஆழ்ந்த சோகத்திற்குரியது, திருப்தியற்றது மற்றும் வருந்தத்தக்கது. மூடிய கதவுகளில் இரகசியமாக நடத்தப்படும் ஒரு விசாரணை செல்லுபடியாகும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் தூதரக ஒப்பந்தம் நாங்கள் விசாரணையில் கலந்துகொள்ளலாம் என்று கூறுகிறது.” என்று கூறினார்.
இது பற்றிக் கூறும் மூத்த பத்திரிகையாளர்கள் சீனா கோவிட் தொற்று தொடர்பான தகவல்கள், அங்கு நடக்கும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஊடங்களை பேசவிடாமல் ஒடுக்குவதாகக் கூறுகின்றனர்.