சீர்காழி : ஸ்ரீ கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

இன்று நடைபெற்ற ஸ்ரீகைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளன.  பழைமை வாய்ந்த இந்தக் கோயில்களில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 11 -ம் தேதி முதல்  யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனையடுத்து யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு, மங்கல இசை முழங்க கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை வேத மந்திரங்கள் முழங்க சிவாசார்யர்கள் விமானக் கலசங்களில்

கும்பாபிஷேகம்

ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சுந்தரேசன், ஜெகதீசன் குடும்பத்தினர் மற்றும் கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Source link

Leave a Comment

Your email address will not be published.