சுடிதார் திருடிய பெண்கள் சிக்கினர்| Dinamalar

காரைக்கால்-துணிக்கடையில் சுடிதார் டாப்ஸ் திருடிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் புதுத்துறை டைமண்ட் நகரை சேர்ந்த முகமது அஸ்ரப் அலி, பாரதியார் சாலையில் உள்ள செல்வி ரெடிமேடு ஸ்டோர் துணிக்கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் கடையில் வியாபாரம் செய்யும்போது, 2 பெண்கள் புடவைகளை வாங்குவதுபோல் துணிகளை பார்த்துள்ளனர்.பின், கலர் பிடிக்கவில்லை என கூறிவிட்டு வெளியில் செல்லும்போது கடைவாசலில் வைத்திருந்த சுடிதார் டாப்ஸ் கட்டுகளை திருடினர். இரண்டு பெண்களையும் கடை ஊழியர்கள் மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டிபால் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த மலர், 40; உஷா, 50, என்பது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Source link

Leave a Comment

Your email address will not be published.