Sunday, July 3, 2022
Homeஅரசியல் செய்திகள்``சேகர்பாபுவின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது!” - பாராட்டும் பாஜக-வின் வானதி சீனிவாசன்

“சேகர்பாபுவின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கிறது!” – பாராட்டும் பாஜக-வின் வானதி சீனிவாசன்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் சூழலில், பா.ஜ.க-வின் சட்டமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

சேகர்பாபு

“சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவுடன் முன்பு பல தொலைக்காட்சி விவாதங்களில் காரசாரமாக விவாதித்திருக்கிறீர்கள். அந்த காட்சிகளை நினைவுபடுத்துவது போல சில நேரங்களில் சட்டமன்றத்தில் உங்கள் இருவருக்குமான உரையாடலைப் பார்க்க முடிகிறதே?”

அப்பாவு

“ மூத்த சட்டமன்ற உறுப்பினரான சபாநாயகர், அதிக அனுபவம் வாய்ந்தவர். அவையில் பல நேரங்களில் எனக்கு வழிகாட்டவும் செய்கிறார். அதே நேரம், நான் பேசுகிறபோது அதிக கவனத்துடன் இருக்கிறார். ஆளும் கட்சிக்கு எதிராக என்னிடமிருந்து எந்த வார்த்தையும் வந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்.

மற்றபடி, இறுக்கமான சூழல் இல்லை. அவருக்கென்று இருக்கக்கூடிய நெருக்கடிகளும் சங்கடங்களும் எங்களுக்குப் புரிகிறது. சில நேரம், அமைச்சர்களின் பதில்கள் வருவதற்கு முன்பாக, சபாநாயகரே பதிலளித்துவிடுகிறார். ஒருமுறை, ’அமைச்சர்களின் பதிலை பேரவைத் தலைவர் வாயிலாகக் கேட்கிறேன்’ என்று நகைச்சுவையாக நான் குறிப்பிட்டேன்.”

“எந்த அமைச்சர் நன்றாக செயல்படுவதாகப் பார்க்கிறீர்கள்?”

“சீனியர் அமைச்சர்கள் அனைவருமே தங்கள் பொறுப்புகளை உணர்ந்து பொறுமையாகவும் சரியாகவும் பதில் அளிக்கிறார்கள். புதிய அமைச்சர்களில் சேகர்பாபுவின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை தெளிவாக அளிக்கிறார்.

சேகர்பாபு

நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தளவில் நிறைய குறுக்கீடுகள் செய்வார். குறிப்பாக, நான் பேசும்போது அவர் அதிகமாக குறுக்கிடுவார். வழக்கமாக, உறுப்பினர்களின் முதல் பேச்சில் யாரும் குறுக்கிட மாட்டார்கள். அதுதான் மரபு. ஆனால், என் முதல் பேச்சில் நான்கு ஐந்து அமைச்சர்கள் குறுக்கிட்டார்கள். சரி, நமது முதல் பேச்சுக்கே இத்தனை அமைச்சர்கள் குறுக்கிடுகிறார்கள் என்பதைப் பெருமையாக எடுத்துக்கொண்டேன்.”

“தனது தலைமையிலான அரசை, ‘திராவிட மாடல்’ அரசு என்று முதல்வர் ஸ்டாலின் முன்னிறுத்துகிறார். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“திராவிடம் என்பது தென்னிந்தியாவைக் குறிக்கிறது என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். நாங்களும், திராவிடம் என்பதை ஒரு நிலப்பரப்பின் வாயிலாகத்தான் பார்க்கிறோம். திராவிடம் என்பது இந்திய தேசியத்தின் பிரிக்கப்பட முடியாத ஓர் அங்கம். நாம் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பலருக்கும் பங்கு இருக்கிறது. இதை நான் சட்டமன்றத்தில் குறிப்பிட்டபோது, ‘இல்லை, இல்லை. அதற்கும் முன்பாக நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கிவிட்டோம்.

ஸ்டாலின்

எனவே, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, அதன் பெருமையில் எங்களுக்கு பங்கு இருக்கிறது’ என்று சொன்னார். சரி, அந்தப் பெருமையை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்பாக, தமிழ் மண்ணுக்கென்று ஒரு பெருமை இருக்கிறது. சுயமரியாதை என்று பேசுகிறார்கள். குலோத்துங்கள் சோழனை கேள்வி கேட்ட கம்பருக்கு சுயமரியாதை இருந்தது. சமூகநீதி என்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராமானுஜர் சமூகநீதியை இந்த மண்ணில் கொண்டுவந்திருக்கிறார். எனவே, சுயமரியாதை என்பது நீதிக்கட்சி தோன்றிய பிறகுதான் வந்தது என்பது அல்ல. திராவிட மாடல் என்று சொன்னால், அதில் காங்கிரஸுக்கும் பங்கு உண்டு, அ.தி.மு.க-வுக்கும் பங்கு இருக்கிறது. அதனால், இதை ‘தி.மு.க மாடல்’ என்று சொல்லுங்கள்.”

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments