ஜானியின் பதிலோ வேறு மாதிரி இருந்தது. ஹெர்ட் பாட்டிலை உடைத்ததால்தான் தன்னுடைய விரலின் நுனி துண்டிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார். இதற்கு பதிலாக, சுவரில் இருந்த ஹேங்கிங் போனில் குத்தி உடைத்ததுதான் இதற்கான காரணம் என்றும், தாக்குதலுக்குப் பிறகு அங்கு என்ன நடந்தது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியவில்லை எனவும் ஆம்பர் தெரிவித்தார். இந்த நிகழ்வுக்குப் பிறகு ஜானி தன்னுடைய உடைந்த கையின் ரத்தம், பெயின்ட் உள்ளிட்டவற்றால் சுவரெங்கும் தொடர்பில்லாதவற்றைக் கிறுக்கி வைத்திருக்கிறார். இதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கான ஆடியோ ரெக்கார்டிங் ஜானி தரப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் ஜானி, “என்னுடைய விரல் போய்விட்டது…” என்கிறார்.
“நீ இந்த உலகுக்குச் சொல் ஜானி. நான், ஜானி டெப், ஒரு ஆண். நான் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று சொல். உன்னை யார் நம்புகிறார்கள் என்று பார்ப்போம். எத்தனை பேர் உன் பக்கம் நிற்பார்கள் என்றும் பார்ப்போம்” என்று ஆம்பர் ஹெர்ட்டின் வார்த்தைகள் ஒலிக்கின்றன.
ஹெர்டின் வழக்கறிஞர், அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று ஜானியிடம் கேட்ட போது, “ஆமாம், நான் பாதிக்கப்பட்டவன்தான் என்று சொன்னேன்” என்றார்.
அந்த ஆடியோ கிளிப்பிங்கில் ‘நான் கோபப்பட்டிருக்கக் கூடாது’ என ஹெர்ட் பேசுவது போல இருக்கிறது.