ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் ஒவைசி, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், எரிபொருள் விலையேற்றம், சமீபத்திய மசூதி விவகாரம் போன்றவற்றில், பா.ஜ.க அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி ஹர்நாத் சிங் யாதவ், ஒவைசியை பாகிஸ்தானை நிறுவிய முகமது அலி ஜின்னாவுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹர்நாத் சிங், “சுதந்திரத்துக்கு முன்னர் ஜின்னா செய்த, நாட்டை அழிக்கும் அதே வேலையைத்தான் ஒவைசி இன்று நன்கு திட்டமிட்டுச் செய்துவருகிறார். ஒவைசியின் இந்த அணுகுமுறையை இந்திய மக்கள் பொறுத்துக்கொள்ளவும் மாட்டார்கள், இதுபோன்ற தவறான செயல்களை அனுமதிக்கவும் மாட்டார்கள்.