Friday, July 1, 2022
Homeஅரசியல் செய்திகள்டாடாவுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி| Dinamalar

டாடாவுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி| Dinamalar

புதுடில்லி: டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உப்பு முதல் சாப்ட்வேர் வரை வர்த்தகம் செய்யும் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக, சபூர்ஜி பலோன்ஜி குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி, 2012ல் நியமிக்கப்பட்டார். அவரது நிர்வாகத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் கவுரவ தலைவர், ரத்தன் டாடா அதிருப்தி அடைந்தார். இதையடுத்து சைரஸ் மிஸ்திரி, 2016ல் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சைரஸ் மிஸ்திரியை மீண்டும் டாடா சன்ஸ் குழும செயல் தலைவர் பதவியில் அமர்த்த, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து டாடா சன்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி சைரஸ் மிஸ்திரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments