Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்டில்லி முதல்வர் - பா.ஜ., சண்டை வலுக்கிறது: செய்தி தொடர்பாளர் கைதில் அரங்கேறிய நாடகம்

டில்லி முதல்வர் – பா.ஜ., சண்டை வலுக்கிறது: செய்தி தொடர்பாளர் கைதில் அரங்கேறிய நாடகம்

புதுடில்லி-டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்த பா.ஜ., செய்தி தொடர்பாளர் தஜிந்தர்பால் சிங் பாகாவை, பஞ்சாப் போலீசார் நேற்று காலை டில்லியில் கைது செய்தனர்.

latest tamil news

அவரை பஞ்சாப் அழைத்து செல்லும் வழியில் தடுத்து நிறுத்திய ஹரியானா போலீசார், பாகாவை டில்லி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

இங்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் தஜிந்தர்பால் சிங் பாகா, 36, ஜனக்புரியில் வசித்து வருகிறார். இவர், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து, சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். பரபரப்புமார்ச் 30ம் தேதி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன், பா.ஜ., இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கெஜ்ரிவால் குறித்து தரக்குறைவான கருத்துக்களை பாகா தெரிவித்ததாக, ஆம் ஆத்மி பிரமுகர் அலுவாலியா என்பவர், பஞ்சாப் மாநிலம் மொஹாலி போலீசில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில், பாகா மீது பல்வேறு பிரிவுகளில் மொஹாலி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், டில்லியில் உள்ள பாகா வீட்டுக்கு, பஞ்சாபைச் சேர்ந்த 60 போலீசார் நேற்று காலை வந்தனர். அவரை கைது செய்து, காரில் மொஹாலி அழைத்து சென்றனர். உடனே, பாகாவின் தந்தை பீரீத்பால் சிங், ‘என் வீட்டுக்குள் நுழைந்த சிலர் என்னை தாக்கி, என் மகனை கடத்தி சென்றுவிட்டனர்’ என, ஜனக்புரி போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து, பாகாவுடன் பஞ்சாப் நோக்கி விரைந்து கொண்டிருந்த காரை, ஹரியானாவின் பிப்லி அருகே, ஹரியானா போலீஸ் உயர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.’தஜிந்தர்பால் சிங் பாகாவை, சிலர் வலுக்கட்டாயமாக அவர் வீட்டில் இருந்து அழைத்து செல்வதாக புகார் வந்ததுள்ளது. இதை நாங்கள் விசாரிக்க வேண்டும்’ எனக் கூறிய அவர்கள், பாகாவை பிப்லி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.

சிறிது நேரத்தில் டில்லி போலீஸ் குழு பிப்லி போலீஸ் ஸ்டேஷன் வந்து, அங்கிருந்த பாகாவை அழைத்துக் கொண்டு டில்லி சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக, பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அரசு முறையிட்டுள்ளது. ‘நோட்டீஸ்’அடுத்து, ஹரியானாவின் குருஷேத்ரா எஸ்.பி.,க்கு, பஞ்சாபின் மொஹாலி மூத்த எஸ்.பி., விவேக் ஷீல் சோனி கடிதம் எழுதியுள்ளார்.

latest tamil news

அதன் விபரம்:தஜிந்தர்பால் சிங் பாகா மீது, மொஹாலியில் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐந்து முறை அவருக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பியும் ஆஜராகாததை அடுத்து, அவரை கைது செய்தோம். குருஷேத்ராவில் ஹரியானா போலீசார், பாகாவை தடுத்து நிறுத்தி, அவரை மீண்டும் டில்லிக்கு அனுப்பி வைத்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த செயல், சட்ட விரோதமாக சிறை பிடிப்பதற்கும், குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் தலையிடுவதற்கும் சமம். பஞ்சாப் போலீசாருடன் பாகாவை மொஹாலிக்கு அனுப்பி வைத்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments