Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவு - சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு! பின்னணி என்ன?...

டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவு – சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு! பின்னணி என்ன? | T Rajendar admitted in hospital due to health issues

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட சில நாள்களிலேயே டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டிற்கும் கிளம்பச் சொல்லிவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து ஒரு வாரம் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவேண்டும், பூரண ஓய்வு வேண்டும் என மருத்துவர்கள் அட்வைஸ் செய்ததால் அப்பாவைச் சிம்பு மருத்துவமனையிலேயே தங்கியிருந்து உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டார். ‘நீங்க இங்கிருந்தால்தான் மருந்து மாத்திரைகளை நேரம் தவறாம மிஸ் பண்ணாம சாப்பிடுவீங்க’ எனச் சொல்லி, மருத்துவமனையிலேயே அப்பாவை ஓய்வு எடுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். டி.ஆரும் குடும்பத்தினரின் அன்பிற்காகத் தற்போது மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார்.

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

டி.ஆர். அடிக்கடி பிரஸ்மீட் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தாலும் அந்த பிரஸ் மீட் நடந்த அடுத்த கணத்திலிருந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுவதைக்கூடத் தவிர்த்துவிடுவார். இதனால்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவருடன் நட்பு வட்டத்தில் உள்ள மீடியாவினருக்கே உடனடியாக தெரியாமல் போனது என்கிறார்கள்.”

இவ்வாறு அவரது நெருங்கிய வட்டாரத்தினர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

சிம்பு அறிக்கை

சிம்பு அறிக்கை

இந்நிலையில் சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், “எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments