Tuesday, July 5, 2022
Homeஅரசியல் செய்திகள்`டெல்லி துணை முதல்வர் ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும்’ - அஸ்ஸாம் முதல்வரின் மனைவி அவதூறு...

`டெல்லி துணை முதல்வர் ரூ.100 கோடி இழப்பீடு தரவேண்டும்’ – அஸ்ஸாம் முதல்வரின் மனைவி அவதூறு வழக்கு | Assam CM’s wife files Rs 100 cr defamation suit against Manish Sisodia

அஸ்ஸாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. கொரொனா தொற்று உலக நாடுகளையே புரட்டிப் போட்ட காலத்தில் பி.பி.இ கிட், அதாவது முழு உடல் கவச உடைகள் வாங்கியதில் மோசடி நடந்ததாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

இந்த மோசடியில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அவரது மனைவி ஆகியோர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக நேற்று கவுகாத்தியில் உள்ள கம்ரூப் சிவில் நீதிபதி நீதிமன்றத்தில் ரினிகி புயன் சர்மா, ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments