Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்தங்க பத்திரங்களில் முதலீடு; கொரோனா காலத்தில் ஜோர்| Dinamalar

தங்க பத்திரங்களில் முதலீடு; கொரோனா காலத்தில் ஜோர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-கொரோனா பரவல் அதிகமாக இருந்த, கடந்த இரண்டு நிதியாண்டுகளில், 29 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப் பத்திரம் விற்பனையாகியுள்ளது.

latest tamil news

நடப்பு நிதியாண்டின் முதல் தங்கப் பத்திரம் இன்று வெளியிடப்பட உள்ளது.தங்கமாக வாங்காமல், அதற்கு இணையாக தங்கப் பத்திரங்கள் வாங்கும் திட்டத்தை, 2015 நவம்பரில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. ரிசர்வ் வங்கி புள்ளி விபரங்களின்படி, இதுவரை, 38 ஆயிரத்து 693 கோடி ரூபாய் மதிப்புள்ள, 90 ஆயிரம் கிலோ தங்கத்துக்கான பத்திரம் விற்பனையாகியுள்ளது.

latest tamil news

கடந்த, 2020 – 2021 மற்றும் 2021 – 2022ம் நிதியாண்டில் மட்டும், 29 ஆயிரத்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப் பத்திரம் விற்பனையாகிஉள்ளது. இது, இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நடந்த விற்பனையில், 75 சதவீதமாகும்.இந்நிலையில், புதிய தங்கப் பத்திர வெளியீடு இன்று துவங்குகிறது. ஐந்து நாட்களுக்கு இந்த விற்பனை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments