Thursday, June 30, 2022
Homeஜோதிடம்தச வாயுக்களையும் சீராக இயங்கச் செய்து உடலை வலுவாக்கும் தேக சுத்தி யோகா... பயிற்சி -...

தச வாயுக்களையும் சீராக இயங்கச் செய்து உடலை வலுவாக்கும் தேக சுத்தி யோகா… பயிற்சி – 4 | Inner healing and cleansing yoga training online event by Sakthi vikatan

‘யோகம் செய்வதற்கே ஒரு யோகம் வேண்டும்’ என்பார்கள் பெரியோர்கள். யோகத்தின் பலனே சீரான உடல் ஆற்றல் தான். யோகத்தின் மற்றொரு முக்கிய பலன் கழிவை முறையாக நீக்க உதவுதல். அழுக்கான அறை நமக்கு எரிச்சலைக் கொடுக்கும். அதேபோன்று அழுக்குகள் நம் உள்ளுறுப்புகளில் தேங்குவதும் நம் உடலுக்குப் பிடிக்காததுதானே. அவ்வாறு உள்ளுறுப்புகளில் தேங்கும் கழிவுகளை, அழுக்குகளை, விஷங்களை நீக்கவே தேக சுத்தி யோகப் பயிற்சி உதவுகிறது.

யோகா குரு மு. அரி

யோகா குரு மு. அரி

மூலாதாரந் தோன்றி சகலமுமாய் நிற்கும் பிராணன், மல சலங்களை கழிப்பிக்கும் அபானன், விக்கல், கக்கல் வழி நிற்கும் உதானன், அன்ன சாரத்தை 72,000 நாடிகளில் சேர்த்து வைக்கும் வியானன், உடலின் ஆற்றலை சமமாக இருக்கச் செய்யும் சமானன், இருமல், தும்மலை உருவாக்கும் நாகன், கண்ணாற்றலைச் சரி செய்யும் கூர்மன், சோம்பல், கொட்டாவிகளை உண்டு பண்ணும் கிரிகரன், இமைத்தல், நகைத்தலை கட்டுப்படுத்தும் தேவதத்தன், உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் தான் பிரியாமல் நின்று உடலைச் சிதைக்கச் செய்து, இறுதியில் கபாலத்தின் வழியே செல்லும் தனஞ்செயன். இந்த 10 வாயுக்களும் நம் உடலில் சரிவர இயங்கினால்தான் நம் உடல் ஆரோக்கியமாகச் செயல்படும் என்பது சித்தர்கள் விதி.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments