Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்தமிழகம் நடத்தும் ஒலிம்பியாட் செஸ்: 145 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முன்பதிவு; அமைச்சர் தகவல்! |...

தமிழகம் நடத்தும் ஒலிம்பியாட் செஸ்: 145 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முன்பதிவு; அமைச்சர் தகவல்! | Tamilnadu Olympiad Chess: Participants from 145 countries enrolled already

தமிழக சுற்றுச்சூழல்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நெடுவாசலில் உள்ள மாரியம்மன் கோயில் வளாகம் முழுவதும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பேவர் பிளாக் அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அமைச்சர்மெய்ய நாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் ஒலிம்பியாட் செஸ் போட்டியை உலகமே வியக்கும் வகையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தமிழக முதல்வர் ஆலோசனையின்படி மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு உள்ள சுற்றுலா மாளிகையில் முன்பதிவிற்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இதுவரை 145 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். சுமார் 180 முதல் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியைக் காண அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதைத் தடுக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு உலக அளவில் பருவநிலை மாற்றத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது நமக்கு ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மரக்கன்றுகளை நடவு செய்து கார்பன் புகையை தவிர்க்கவும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments