Saturday, June 18, 2022
Homeஅரசியல் செய்திகள்``தமிழ் அலுவல் மொழி; கச்சத்தீவு மீட்பு; திராவிட மாடல்..!" - ஸ்டாலின் ஸ்பீச் ஹைலைட்ஸ் |...

“தமிழ் அலுவல் மொழி; கச்சத்தீவு மீட்பு; திராவிட மாடல்..!” – ஸ்டாலின் ஸ்பீச் ஹைலைட்ஸ் | Tamilnadu cm stalin speech at pm modi function

தமிழ்நாட்டில் அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அவரை தமிழக ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்த பிரதமர் 31,500 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.

பிரதமர் - முதல்வர்

பிரதமர் – முதல்வர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசு விழா இது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திராவிட மாடல் வளர்ச்சி. இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. தமிழ்நாட்டின் வளர்ச்சி சமூக நீதி, சமத்துவத்தின் அடிப்படையிலானது. வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி. ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களின் நிதி சுமையை சமமாக ஏற்க வேண்டும். ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை குறைந்தது இரண்டு ஆண்டுக்காலம் நீட்டிக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய நேரமிது. தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும். உறவுக்கு கைக் கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்” என்றார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments