தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப்பிரவேச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு பழைமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை உடனுறை ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பத்து நாள்கள் வைகாசிப் பெருவிழா நடைபெறும். ஆதீன குரு முதல்வர் குருபூஜை விழா, மற்றும் ஆதீனகர்த்தர் பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி எனப் பலவும் நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.