உடுப்பி, உடுப்பி மாவட்டத்தில், தற்கொலை சம்பவங்கள் அதிகரிக்கின்றன. இதில் இளம் தலைமுறையினரின் எண்ணிக்கையே அதிகம் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.உடுப்பியில், தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்கின்றன. 15 முதல் 35 வயது வரையிலான இளம் தலைமுறையினர், அதிகமாக தற்கொலையை நாடுவது, ஆதங்கத்துக்குரிய விஷயமாகும். சமீபத்தில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், தலைமை ஏட்டு ராஜேஷ் குந்தர் தற்கொலை சம்பவங்கள், சர்ச்சைக்கு காரணமாகின.தொழிலதிபர்கள், மாணவ — மாணவியர், ஹோட்டல் தொழிலாளர் என, பலர் தற்கொலை செய்து கொண்டனர். நோய் பாதிப்பு, கடன் தொல்லை, தேர்வில் தோல்வி, குடிபோதை, குடும்ப பிரச்னை என, பல்வேறு விஷயங்கள் தற்கொலைக்கு காரணமாகின்றன. கொரோனா நேரத்தில், இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளது.சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உடுப்பியில் 2020 ஜனவரி முதல் ஜூன் வரை, 90க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும், தற்கொலை அதிகரிக்கிறது. மன அழுத்தம், பொருளாதார நெருக்கடி, வேலை இல்லாமை, குடும்ப பிரச்னை, வரதட்சணை கொடுமை, உடல் ஆரோக்கிய பாதிப்பு போன்றவை தற்கொலைக்கு காரணமாகின்றன.குடும்ப உறுப்பினர், நண்பர்கள் பரஸ்பரம் நட்புடன் இருக்க வேண்டும். நண்பர் அல்லது குடும்பத்தினர் தற்கொலை எண்ணத்தில் இருந்தால், அவர்களை சமாதானம் செய்து, மனதை மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement