Wednesday, July 13, 2022
Homeசினிமா செய்திகள்"தலையணைப் பூக்கள் சீரியல் லுக் தான்; ஆனா, இது வேற!' - நிஷா கணேஷ் ஷேரிங்ஸ்...

“தலையணைப் பூக்கள் சீரியல் லுக் தான்; ஆனா, இது வேற!’ – நிஷா கணேஷ் ஷேரிங்ஸ் | actress nisha ganesh acted cameo role in sembaruthi serial!

சின்னத்திரையில் பிரபலமானவர் நிஷா கணேஷ். தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் விகடன் இணைய தளத்திற்காக அவரை பேட்டி எடுத்திருந்தோம். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ தொடரில் இவர் நடிக்கிறார் என்கிற செய்தியை பார்த்தவுடன் அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

நிஷா கணேஷ்

நிஷா கணேஷ்

‘செம்பருத்தி’ தொடரில் வக்கீலாக ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிக்கிறேன். சீரியலில் முழு நேரம் நடிக்கத் தயக்கம் காட்டினேன். ஆனா, இது கொஞ்ச நாள் ஷூட்டிங் தான் என்பதால் ஓகே சொல்லிட்டேன். தவிர, இந்தத் தொடரை மஞ்சுநாதன் சார் டைரக்ட் பண்ணிட்டு இருக்காங்க. பல வெற்றித் தொடர்களை கொடுத்த இயக்குநருடன் சேர்ந்து வேலை பார்க்கிறது புதுவித அனுபவமா இருக்கு. அதே மாதிரி, ஜாலியா நடிச்சிட்டு இருக்கேன்.

இதுவரை நான் வக்கீல் கேரக்டரில் நடிச்சது இல்ல. என் மாமனார் வக்கீல். கணேஷ் குடும்பத்தில் 2, 3 வக்கீல் இருக்காங்க. நிஜ கோர்ட்டில் நடக்கும் விவாதம் வேற மாதிரி இருக்கும். நிஜமான காரசாரமான விவாதங்கள் எல்லாம் சீரியலில் இருக்காது. என் மாமனாருக்கு நான் வக்கீல் கேரக்டர் பண்றேன்னு சொன்னதும் பயங்கர ஹாப்பி. அவர் இப்ப ரிட்டயர்டு ஆகிட்டார். ஆனாலும், வீட்டில் சட்டப் புத்தகங்கள் நிறைய வச்சிருக்கார். அதெல்லாம் பார்த்திருக்கேன் என்றவரிடம் கேமியோ ரோல் குறித்துக் கேட்டோம்.

நிஷா கணேஷ்

நிஷா கணேஷ்

என்னைப் பொறுத்தவரை Work is Work. அதுல சின்ன வேலை, பெரிய வேலை என்பதெல்லாம் கிடையாது. நான் லீட் ரோலில் மட்டும்தான் நடிப்பேன். இதெல்லாம் பண்ண மாட்டேன் அப்படியெல்லாம் நான் யோசிச்சதுகூட கிடையாது. எனக்கு இந்தக் கேரக்டர் பிடிச்சிருந்தது. இதுவரை நான் டிரை பண்ணாத ஒரு கேரக்டரில் நடிக்க உண்மையாகவே எனக்கு ஜாலியா இருக்கு. வீட்ல அப்பாவும் (கணேஷூம்), பொண்ணும் சேர்ந்து நான் நடிக்கிற மாதிரி நடிச்சுக் காட்டி கிண்டல் பண்ணிட்டு இருப்பாங்க.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments