தாஜ் மஹால் விவகாரம்: “ஆவணங்கள் இருந்தால் காட்டுங்கள்..!” – பாஜக எம்.பி-க்கு முகலாய வம்சாவளி சவால்| descendant of Mughal, Yakub rise direct question to BJP MP on the Taj mahal issue

தாஜ் மஹாலில் பூட்டியிருக்கும் 22 அறைகளை ஆய்வுசெய்ய, இந்திய தொல்லியல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.க நிர்வாகியொருவர் அண்மையில் அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், “பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையைக் கேலிக்கூத்தாக்காதீர்கள். இன்று தாஜ் மஹால் அறையைத் திறக்கச் சொல்கிறீர்கள், நாளை நீதிபதிகளின் அறைகளுக்குள் செல்லவும், ஆய்வு செய்யவும் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் கோருவீர்களா?” எனச் சரமாரியாகக் கேள்வியெழுப்பி, வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பா.ஜ.க எம்.பி தியா குமாரி

பா.ஜ.க எம்.பி தியா குமாரி

அதைத் தொடர்ந்து பா.ஜ.க எம்.பி-யும், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி, “தாஜ்மஹால் இருக்கும் நிலம் எங்கள் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது. ஆனால், அதை ஷாஜஹான் கைப்பற்றிக்கொண்டார்” எனக் கூறியது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

யாகூப் ஹபீபுதீன் டூசி - முகலாய வம்சாவளி

யாகூப் ஹபீபுதீன் டூசி – முகலாய வம்சாவளி

இந்த நிலையில், தியா குமாரியின் பேச்சுக்கு, முகலாய வம்சாவளி எனக் கூறிக்கொள்ளும் யாகூப் ஹபீபுதீன் டூசி ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு பதிலளித்திருக்கிறார். அந்த வீடியோவில், “உங்களிடம் ஆவணங்கள் ஏதேனும் இருந்தால் காட்டுங்கள். உங்களிடம் ஒரு துளி ராஜபுத்திர ரத்தம் இருந்தால் ஆவணங்களை எடுத்துக்காட்டுங்கள். இது போன்ற சர்ச்சையான அறிக்கைகளை வெளியிடக் கூடாது. அதுமட்டுமல்லாமல், முகலாயர்கள் மற்றும் ராஜபுத்திரர்கள் பகிர்ந்துகொண்ட அன்பின் பிணைப்பை உடைக்க முயலக் கூடாது” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.