Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்"தாம்பத்யத்தில் போட்டி, மனைவி வெறுத்த பிரமாண்ட பார்ட்டி!" `WILL' சுயசரிதையில் மனம்திறந்த வில் ஸ்மித்

"தாம்பத்யத்தில் போட்டி, மனைவி வெறுத்த பிரமாண்ட பார்ட்டி!" `WILL' சுயசரிதையில் மனம்திறந்த வில் ஸ்மித்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் சுயசரிதையான ‘Will’ புத்தகம் வெளியாகியிருக்கிறது. வன்முறையாளரான தந்தை, வில் ஸ்மித்தின் ஹாலிவுட் ரெக்கார்டு, பிரிவு எனப் பலவற்றைப் பற்றி இப்புத்தகத்தில் பேசியிருக்கிறார் வில் ஸ்மித். ஆனாலும், எல்லாவற்றையும் மீறி வழக்கம் போல அதில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய டாப்பிக்கே வைரலாகியிருக்கிறது.

Will Smith

“தினமும் குடித்தோம். ஒவ்வொரு நாளும் பலமுறை செக்ஸ் வைத்துக்கொண்டோம். இதை தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு செய்திருக்கிறோம். ஒரு போட்டியில் ஈடுபடுவது போல நான் இதைச் செய்து கொண்டிருந்தேன். ஒன்று நான் இந்தப் பெண்ணை தாம்பத்யத்தில் திருப்திப்படுத்த வேண்டும். அல்லது அதில் போராடி செத்துப்போக வேண்டும்.”

இரண்டாவது மனைவி ஜேடாவுடன் ரிலேன்ஷிப்பில் இருந்த நாள்கள் குறித்து இப்படி விவரிக்கிறார் வில் ஸ்மித். ஆப்பிள் டிவியில் வெளியாகியிருக்கும் ஓப்ராவுடனான பேட்டியில், “நீங்கள் இறக்கவில்லை என்பதால் போட்டியில் வென்றுவிட்டீர்கள் என நம்புகிறேன்” என நக்கலடித்திருக்கிறார் ஓப்ரா.

அதன்பின்னர் வில் ஸ்மித் பகிரும் விஷயங்கள் ரிலேசன்ஷிப்பில், திருமண பந்தத்தில் இருக்கும் எல்லோருமே யோசித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. “ஆனால், அதன்பின்புதான் நான் நினைத்ததைவிடவும் சிக்கலானதாக எங்கள் உறவு மாறியது. நாங்கள் பேச ஆரம்பித்தாலே, நான்கு மணி நேரத்துக்கு விவாதம் நீண்டது. ஜேடாவின் நாற்பதாவது பிறந்தநாளை மிகப்பெரிய அளவிலான பார்ட்டியை ஏற்பாடு செய்தேன். ஆனால், அந்தப் பிரமாண்டத்தின் பின்னர்தான், இனி நாங்கள் ஒன்றிணைந்து வாழ முடியாது என்பதையே முடிவு செய்தோம். நாங்கள் இருவரும் அதிகாரபூர்வமாக பிரிந்திருக்கவில்லை. நாங்கள் இருவரும் எங்களை மகிழ்வாக பார்த்துக்கொள்ள முடியும் என்பது வெறும் கற்பனை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டோம்” என்கிறார்.

ஜேடாவின் நாற்பதாவது பிறந்த நாளுக்கு மிகப்பெரிய பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தார் வில். மெக்ஸிகோவில் மூன்று நாள்களுக்கு அந்த பார்ட்டியை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜேடாவின் குடும்பம் பற்றிய டாக்குமென்ட்ரி, மிஸ்ஸி எலியட்டின் பகட்டான டின்னர் எனக் களைகட்டியது பார்ட்டி. ஒரு கட்டத்துக்கு மேல் ஜேடாவுக்கு இது திகட்ட ஆரம்பித்தது. பிடித்திருந்தது, நன்றி என்றெல்லாம் ஜேடா எதுவுமே சொல்லவில்லை. இப்போது இதை நிறுத்துங்கள் எனக் கதறியிருக்கிறார். “என் வாழ்க்கையில் நான் பார்த்த அருவருக்கத்தக்க ஈகோ இதுதான்” என இந்த பார்ட்டி குறித்து குறிப்பிடுகிறார் ஜேடா.

Will Smith – Oprah

அதன்பின்னர் பெருவுக்குச் சென்று அமேசான் காடுகளிலிருக்கும் அயவாஸ்கா என்னும் மருந்தை உட்கொள்கிறார் வில் ஸ்மித். நிறைய பெண்களுடன் இருக்கும் ஹரம் போன்றவற்றுக்கு ஆசைப்படுகிறார். ஆனால், இவை அனைத்தும் எவ்விதமான நிம்மதியையும் தராது என்பதையும் உணர்கிறார்.

“நான் என்னை மகிழ்வாக வைத்துக்கொள்ள வேண்டும். ஜேடா அவரை மகிழ்வாக வைத்துக்கொள்ள வேண்டும். சுதந்திரமாக இருப்பதன் சந்தோஷத்தை எங்கள் பிரிவில் உணர்ந்துகொண்டோம். நாங்கள் இருவரும் நூறு சதவிகிதம் ஒற்றுமையாக இருக்கிறோம். அதே சமயம் சுதந்திரமாக இருக்கிறோம்.

நம் பார்ட்னரைத் தவிர அனைவரும் சுதந்திரமாக இருக்க நாம் விரும்புகிறோம். குழந்தைகள், நண்பர்கள் எல்லோருக்கும் அவர்களுக்கான நேரத்தைத் தருகிறோம். நம் வீட்டில் இருக்கும் எல்லோரின் கதையையும் நாமே எழுத ஆசைப்படுகிறோம். எல்லாப் பிரச்னைகளுக்குமான காரணம் அதுவே. என் அப்பழுக்கற்ற வாழ்க்கையில், மனைவி என்னும் அந்தஸ்த்தில் உலவ விரும்பாததால்தான் ஷெரி என் வாழ்க்கையை விட்டு விலகினார்.

ஷெரியிடம் நான் எப்படி நடந்து கொண்டேனோ, அப்படித்தான் நான் ஜேடாவுடனும் நடந்து கொண்டிருக்கிறேன் என்பதையே நான் சில காலம் கழித்துத்தான் உணர்ந்தேன். வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், நான் அவர்களைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என்னைவிட அவர்களை யார் சிறப்பாக பார்த்துக்கொள்ள முடியும் என்கிற கர்வமே மேலோங்கியிருந்த காலமது. தோழமையாக இருப்பதற்கும், திருமண சிறைக்குள் இருப்பதற்கும் வித்தியாசமிருக்கிறது.

நாங்கள் இப்போது எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறோம். ஜேடாவுக்கு ஆரம்பித்திலிருந்தே திருமணம் பற்றிய நம்பிக்கை எல்லாம் இல்லை. வில்லும், ஜேடாவும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நானும், ஜேடாவும் எதுவும் செய்வதில்லை. நாங்கள் இருவரும் எங்களின் இதயங்களில் இருக்கும் பிரியமில்லாத பகுதிகளைக் களைய ஓர் ஆன்மிக பயணம் மேற்கொள்கிறோம். என்ன நடந்தாலும், இந்த வாழ்வில் ஒற்றுமையுடன் இதைக் கடப்போம் என உறுதி கொண்டிருக்கிறோம்” எனப் பேசி முடிக்கிறார் வில் ஸ்மித்.

ஓராண்டுக்கு முன்னர் வேறொரு நிகழ்ச்சியில் வில் ஸ்மித்தும், ஜேடாவும் உரையாடிய போது, “We ride together. We die together. Bad marriage for life” எனச் சிரித்துக்கொண்டே சொல்வார் ஜேடா. நமக்கான சந்தோஷம் நம்மிடம்தான் இருக்கிறது. பிறரிடம் அதைத் தேடுவது என்பது வீண் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் வில் ஸ்மித்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments