Monday, June 20, 2022
Homeஅரசியல் செய்திகள்தாயாரை சந்தித்து ஆசி பெற்றார் யோகி ஆதித்யநாத்| Dinamalar

தாயாரை சந்தித்து ஆசி பெற்றார் யோகி ஆதித்யநாத்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பவுரி: உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று தனது தாயார் சாவித்ரி தேவியை சந்தித்து ஆசி பெற்றார். உ.பி. மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார் பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்யநாத்,49. இன்று உத்தர்கண்ட் மாநிலத்திற்கு நிகழ்ச்சியில் பங்றே்க வந்தார்.
இம்மாநிலம் முன்னர் உ.பி. மாநிலத்திற்குள் இருந்தது. இங்குள்ள கர்வால் மாவட்டம், பவுரி கிராமத்தில் தனது தாயார் சாவித்ரி தேவியை சந்தித்தார். அப்போது அவருக்கு சால்வை அணிவித்து, காலில் விழுந்து வணங்கினார். மகனை கண்ட மகிழ்ச்சியில் யோகியை ஆசீ்ர்வதித்தார் தாயார். இதன் புகை படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

latest tamil news

தந்தை மறைவுக்கு வராத யோகி

முன்னதாக கொரோனா முதல் அலை 2020 ஏப்ரலில் தீவிரமடைந்து நாடு தழுவிய பொது முடக்கம் அமலில் இருந்த போது, உ.பி., முதல்வர் யோகி. ஆதித்யநாத் தந்தை, உடல்நலக்குறைவால் காலமானார். தனது தந்தையின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள யோகி. ஆதித்யநாத், கொரோனா தடுப்பு பணி காரணமாக, நடக்கும் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாது எனவும், இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும்போது, ஊரடங்கு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எனது தாய் மற்றும்உறவினர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments