Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்`தாயைத் தவிர யாரையும் நம்பக்கூடாது!' பாலியல் புகார் கூறிய நடிகைக்கு ஆதரவாக நடிகர் ஹரீஷ் பேரடி ராஜினாமா!...

`தாயைத் தவிர யாரையும் நம்பக்கூடாது!’ பாலியல் புகார் கூறிய நடிகைக்கு ஆதரவாக நடிகர் ஹரீஷ் பேரடி ராஜினாமா! |Malayalam actor harsh perady wants to resign his post in actor association

இதையடுத்து, விஜய் பாபுமீது நடிகர்கள் சங்கமான அம்மா முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மலையாள நடிகர் சங்கத்தில் இண்டானல் கம்ப்ளெயிண்ட் கமிட்டி தலைவராக இருந்த நடிகை ஸ்வேதா மேனன், அதில் உறுப்பினர்களாக இருந்த நடிகைகள் குக்கூ பரமேஸ்வரன், மாலா பார்வதி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மொத்தம் 5 பேர் மட்டுமே உறுப்பினராக உள்ள கம்ப்ளெயிண்ட் கமிட்டியில் வழக்கறிஞர் அனகா மற்றும் ரசன நாராயணன்குட்டி ஆகிய உறுப்பினர்கள் மட்டுமே மீதம் உள்ளனர்.

ஹரிஷ் பேரடி

ஹரிஷ் பேரடி

நடிகர் சங்கத்தின் செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட நடிகையும் அதிருப்தி அடைந்துள்ளார். “பெற்ற தாயை தவிர வேறு யாரையும் நம்ப கூடாது” என பாதிக்கப்பட்ட நடிகை கருத்து தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ஹரீஷ் பேரடி தன்னை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும்படி முகநூல் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் ஹரீஷ் பேரடி கூறுகையில், “பொது சமூகம் ஏற்றுக்கொள்ளாத கிரிமினல்களைப் பாதுகாக்கின்ற, பெண்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அம்மா என்ற சினிமா சங்கத்தின் அடிப்படை உறுப்பினரில் இருந்து என்னை நீக்க வேண்டும்” என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments