Thursday, June 30, 2022
Homeஜோதிடம்திண்டுக்கல்: ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஒரே காவடி; நூறு ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்! | Dindigul: A single...

திண்டுக்கல்: ஒட்டுமொத்த கிராமத்துக்கும் ஒரே காவடி; நூறு ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பர்யம்! | Dindigul: A single kavadi for the entire village, 100 year old tradition continues

தங்கள் கிராமத்துக்குக் கொடுமுடி தீர்த்தத்தோடு வந்த காவடிக்கு, தேங்காய், பழம் படைத்து கிராம மக்கள் அனைவரும் பூஜித்து வழிபடுவர். பின் அங்கிருந்து ரெட்டியார்சத்திரம் வழியாக பழநிக்குப் பாத யாத்திரையாகச் சென்று காவடியை செலுத்துகின்றனர்.

ஆறுமுக தீர்த்தக் காவடி

ஆறுமுக தீர்த்தக் காவடி

காவடி எடுக்கும் முதல் நாளில் வாயில் அலகு குத்திக் கொள்ளும் பக்தர், மீண்டும் காவடியைப் பழநியில் செலுத்தும்வரை 5 நாள்களும் வாயில் அலகு குத்திய நிலையிலேயே இருப்பார். இந்த நாள்களில் அவருக்கு அன்னம், ஆகாரம் எதுவும் கிடையாது. நீராகாரம் மட்டும் அவ்வப்போது வழங்கப்படும். இவ்வாறு கடுமையான விரதம் இருந்து பழநி முருகனுக்கு இந்த ஆறுமுக தீர்த்தக் காவடியைச் செலுத்துகின்றனர். ஒட்டுமொத்த கிராம மக்களின் சார்பாக காவடி எடுத்து வரும் பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார். எனவே கிராம மக்கள் அவருடன் சேர்ந்து பய பக்தியுடன் பழநி வருகிறார்கள்.

இவ்வாறு தலைவன் கோட்டை கிராம மக்கள் காவடியில் கொண்டு வந்த தீர்த்தத்தை, பழநி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்து, இன்று பாதயாத்திரையை நிறைவு செய்தனர். 

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments