Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்திமுக கவுன்சிலரின் உணவகமாக மாறிய அம்மா உணவகம் மெனுவில் பூரி, வடை, ஆம்லேட், உப்புமா |...

திமுக கவுன்சிலரின் உணவகமாக மாறிய அம்மா உணவகம் மெனுவில் பூரி, வடை, ஆம்லேட், உப்புமா | Amma Hotel been taken under control of DMK councillor

திமுக ஆட்சி அமைந்த நிலையில் ஏழை எளியோரின் பசியை போக்க மாண்புமிகு அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட உன்னத திட்டமான அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்புக்கு பின் அம்மா உணவகம் தொடர்ந்து நடைபெறும் என முதலமைச்சரால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் மதுரை உள்ள 10 அம்மா உணவகங்களிலும் ஏற்கனவே  பணிபுரிந்த பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்துவிட்டு திமுக ஆதரவுடைய பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க | சென்னையில் ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்

இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் அவரவர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு முன்னுதாரனமாக மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1ரூபாய்க்கு விற்பனை செய்யக்கூடிய இட்லி மற்றும் 5ரூபாய் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி,  ஆம்லேட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகளை வழங்கிவருகின்றனர். இதேபோல் மதிய வேளைகளிலும் ரசம், மோர், ஆம்லேட் என அனுமதிக்கப்பட்ட சாதத்தோடு சேர்த்து விற்பனை செய்துவருகின்றனர்.

அம்மா உணவகத்திற்காக வழங்கப்படும் மாவு, சிலிண்டர் மற்றும் ஊழியர்களை தனக்கு பிடித்தவாறு உணவுகளை விற்பனை செய்ய வைத்து அதில் லாபம் ஈட்டுவதாகவும் நாள்தோறும் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை அம்மா உணவக ஊழியர்களிடம் பெற்றுக்கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும் இந்த உணவுகளை தயாரிப்பதற்காக ரேசன்கடை அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு ,உளுந்து, ரவை போன்றவை பயன்படுத்துவதாகவும் , ரேசன் அரிசி பொருட்கள் அம்மா உணவகத்திற்கு எப்படி வருகின்றது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க | செய்வினை வைத்து மாட்டைக் கொன்றதாகக் கூறி அண்ணணை வெட்டி கொலை செய்த தம்பி

இவ்வாறாக தங்களின் சுயநலத்திற்காக அம்மா உணவகத்தை வணிக செயல்பாட்டிற்காக மாற்றும் திமுகவினர் அம்மா உணவகத்தில் கை கழுவுவதற்கான சுகாதாரமற்ற நீர் மற்றும் தட்டுக்களை பயன்படுத்தும் நிலையை கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஏழை எளியோரின் பசி போக்க செயல்பட்ட அம்மா உணவகத்தை திமுக கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு லாபம் ஈட்டும் உணவகமாக மாற்றியுள்ளது வேதனை அளிப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர்.

இது போன்று பல்வேறு வகையான உணவுகளை விற்பனை செய்யப்படும் நிலையில் அதற்கான பில்களை பணியாளர்கள் தாங்களாகவே பேப்பரில் பில் எழுதி கொடுப்பதால், மாநகராட்சிக்கு முறைகேடான கணக்கை ஒப்படைத்து மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்படுத்துவதோடு, அம்மா உணவகத்தால் கடும் நஷ்டம் என கூறி அத்திட்டத்தை முடக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடர்பாக கவுன்சிலர் தரப்பில் விளக்கம் கேட்டபோது தாங்கள் பொதுமக்களின் வசதிக்காக குறைந்த விலையில் வழங்குவதாகவும் அரசியல்நோக்கோடு சிலர் புகார் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments