தந்தை பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக விடப்படும் – ஸ்டாலின்
`பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும் பணிகள் ரூ.5 கோடியில் மேற்கொள்ளப்படும்’ – தமிழக பட்ஜெட்
அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக கடைபிடிக்கப்படும்
“இல்லம் தேடி கல்வி திட்டம்” – மாணவர்களின் இல்லம் இருக்கும் பகுதிகளுக்கே சென்று அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். மாலை 5 மணி முதல் 7 மணிவரை தினமும் வகுப்புகள் நடத்தப்படுகிறது.
“மக்களைத் தேடி மருத்துவம்” – அரசின் மருத்துவ சேவைகள் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்குவது இந்த திட்டத்தின் பிரதான நோக்கம். 2021, ஆகஸ்டில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
“மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்” – ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற அடுத்த நாளே, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
“இன்னுயிர் காப்போம் திட்டம்” – சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம் கொண்டுவரப்பட்டது.
“மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்” – மாணவிகள் உயர்கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் கல்லூரியில் சேர்ந்து, கல்வி காலம் முடியும் வரை மாதம் தோறும் அவர்களின் வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் செலுத்தப்படுகிறது.
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” – மக்களின் பிரச்னை குறித்தான புகார் மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் தீர்வு- ஸ்டாலின்