Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்திருட்டுப் போன பைக்... வருத்தத்தில் `குக்கு வித் கோமாளி' மணிமேகலை! | Cooku with Comali...

திருட்டுப் போன பைக்… வருத்தத்தில் `குக்கு வித் கோமாளி’ மணிமேகலை! | Cooku with Comali Manimegalai husband Hussain’s bike was stolen

விஜேவாக அறிமுகமாகி தற்போது ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் மணிமேகலை. நடன இயக்குநர் ஹூசைனை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு நாள்களுக்கு முன்னர் மணிமேகலை – ஹூசைன் தம்பதியினரின் பைக் ஒன்று திருடு போயிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, மணிமேகலை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில்,

மணிமேகலை - ஹூசைன் தம்பதியினரின் பைக்

மணிமேகலை – ஹூசைன் தம்பதியினரின் பைக்

“இன்று அதிகாலை எங்களுடைய பைக் களவு போயிருக்கிறது. அசோக் நகர் பக்கத்தில் எங்கள் நண்பருடைய பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்தி வைத்திருந்தோம். திருமணத்திற்குப் பிறகு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஆசையா வாங்கின எங்களுடைய முதல் பைக். மனசு வருத்தமாகிடுச்சு. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்கிருந்துதான் வருதோ!” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் தனது வண்டி எண்ணையும் அதில் குறிப்பிட்டு, நல்லதாக முடியும் என நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளித்திருக்கிறார். விரைவில் பைக் நிச்சயம் கிடைக்கும் என நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். காவல்துறை தரப்பில் பைக் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments