“கொலை செய்யப்பட்ட பிரபுவுடன், எங்களோட நண்பர்களான செல்வசதீஷ், இசக்கிராஜா, அருண் என்ற ஜெயக்குமார், வசந்த் ஆகிய அஞ்சு பேரும் ஒன்னா சேர்ந்து அந்தக் கட்டடத்தின் மாடியில வச்சு சரக்கடிச்சோம். பிரபு, ‘இனிமேல் நான் தப்பு செய்ய மாட்டேன். திருந்தி வாழப்போறேன்’னு சொன்னார். பிரபுகூட சேர்ந்து நாங்க திருட்டு, கஞ்சா கடத்தல், கொலை முயற்சி செஞ்சுருக்கோம். எங்க மேல நிறைய கேஸ் இருக்கு. பிரபு திருந்தி வாழப்போறேன்னு சொன்னதுனால, போலீஸ்ல எங்களைக் காட்டிக் கொடுத்திடுவார்னு எங்களுக்கு பயம் வந்துச்சு. நாங்க எல்லாருமே சொல்லியும் பிரபு கேட்கலை. எங்களுக்குள்ள வாக்குவாதம் அதிகமாச்சு. அதனால கோவத்துல பிரபுவோட தலையை வெட்டினோம். அதுக்குப்பிறகு அங்க இருந்து தப்பிச்சிடோம்” என்று அந்த சிறுவன் கூறியிருக்கிறார்.
இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். “கொலை செய்யப்பட்ட பிரபு மீது பல காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கஞ்சா கடத்தல், திருட்டு, அடிதடின்னு பல வழக்குகள் நிலுவையில இருக்கு. மூணு வருஷத்துகு முன்னால அவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுனால அவரது மனைவி, குழந்தைகளைக்கூட்டிட்டு வீட்டை விட்டுப் போயிட்டார். அவரோட அக்கா வீட்டுலதான் தங்கி இருந்திருக்கிறார். செல்வசதீஷ் மீது கொலை, திருட்டு வழக்கு இருக்கு. 17 வயது சிறுவனை பிடித்து, கூர்நோக்குப் பள்ளிக்கு அனுப்பியிருக்கோம். தலைமறைவா உள்ள 4 பேரை தேடிட்டு இருக்கோம்” என்றனர்.