திருப்பத்தூர் பிரியாணி விழா விவகாரம் – ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு எஸ்.சி, எஸ்.டி கமிஷன் நோட்டீஸ் | state sc st commission seeking explanation from tirupattur collector in briyani function controversy

மாட்டிறைச்சி பிரியாணி புறக்கணிப்பு தீண்டாமைச் செயலாக தெரிவதாகவும் ஆணையம் அதிரடியாக கேள்வித் தொடுத்திருக்கிறது. நோட்டீஸில், ‘‘சுமார் 2 லட்சம் இஸ்லாமிய மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில், மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி வழங்கப்படாததை வகுப்புவாத அடிப்படையில், நாங்கள் ஏன் பாகுபாடாக எடுத்துகொள்ளக் கூடாது… தீண்டாமையை கடைபிடிக்கவில்லை என்றால், அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’’ என ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

‘‘ஆம்பூர் மாதிரியான பதற்றம் நிறைந்த பகுதியில், மனித ஒருமைப்பாடு அவசியம். மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி கொடுத்தாலும் பிரச்னை ஏற்படும். அனுமதி கொடுக்காவிட்டாலும் பிரச்னை வெடிக்கும் என்பதை மாவட்ட ஆட்சியர் முன்கூட்டியேஆராய்ந்திருக்க வேண்டும். மாட்டிறைச்சி பிரியாணியை புறக்கணிக்க வேண்டுமென்பதில், அவருக்கு உள்நோக்கம் இருந்திருக்காது என்று நம்புகிறோம். ஒருவேளை உள்நோக்கத்துடன் அவர் செயல்பட்டிருந்தால் அது தவறு. சாதி, மதம் வேறுபாடின்றி பொதுமக்கள் அனைவரும் இணைந்து வாழ்வதற்கான சூழலை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து, விழா எடுக்கிறோம் என்ற பெயரில் மக்களை பிளவுப்படுத்தும் செயலில் ஈடுபடக் கூடாது’’ என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

Source link

Leave a Comment

Your email address will not be published.