திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள பாரதிதாசன் நகரைச் சேர்ந்த 75 வயதாகும் மூதாட்டி ஒருவர், ஆதரவின்றி தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11 மணியளவில், அந்தப் பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதாகும் முருகன் என்பவர் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மூதாட்டியின் அலறல் சத்தம்கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து முருகனை விரட்டியிருக்கிறார்கள்.
மூதாட்டியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு தற்போது மூதாட்டியின் உடல்நிலை தேறிவருவதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து, திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்கு பதிவுசெய்து, 7 பிரிவுகளின்கீழ் முருகனைக் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.