Saturday, July 2, 2022
Homeஜோதிடம்திருமலை திருப்பதியில் அனுமன் ஜயந்தி உற்சவம் தொடங்கியது! |Photo Story

திருமலை திருப்பதியில் அனுமன் ஜயந்தி உற்சவம் தொடங்கியது! |Photo Story

அனுமன் ஜயந்தி, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் விரிவாகக் கொண்டாடப்படும் விழா. இங்கு ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று தொடங்கி 41 நாள்கள் இந்த விழா கொண்டாடப்பட்டு வைகாசி மாத கிருஷ்ண பட்ச தசமி அன்று நிறைவு பெறும்.

இன்று வைகாசி தசமி திதி என்பதால் இன்று தொடங்கி அடுத்த நான்கு நாள்களுக்கு (மே29 ) அனுமன் ஜயந்தி உற்சவம் நடக்கிறது.

அனுமன் பிறந்த தலம் திருமலையில் உள்ள அஞ்சநாத்ரியே என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சென்ற வருடம் பிரகடனம் செய்தது. அதை ஒட்டிச் சென்ற ஆண்டு சிறப்பான முறையில் அனுமத் ஜயந்தி கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக இன்று ஆகாச கங்கை பால ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டது. ஜாபாலி தீர்த்தம் அருகே உள்ள ஶ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயிலுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கப்பட்டன.

இந்த ஐந்து நாள் நிகழ்வை ஒட்டிக் கலை நிகழ்ச்சிகளும் வேத பாராயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருமலையில் இருக்கும் மலைப் பாதைகளில் உள்ள ஶ்ரீபேடி ஆஞ்சநேயர் திருக்கோயில் மற்றும் ஶ்ரீபிரசன்ன ஆஞ்சநேயர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

இங்கு சென்று வர பக்தர்களுக்கு சிறப்புப் போக்குவரத்து வசதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்திருக்கிறது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments