Wednesday, July 6, 2022
Homeஅரசியல் செய்திகள்துணைத்தாசில்தாரின் முன்ஜாமின் தள்ளுபடி| Dinamalar

துணைத்தாசில்தாரின் முன்ஜாமின் தள்ளுபடி| Dinamalar

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மணல் திருட்டு வழக்கில் துணைத் தாசில்தார் செந்தில்வேல் உட்பட 2 பேரின் முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பொட்டல் கிராமத்தில் கனிமங்களை சேமித்து வைக்க மனுவேல் ஜார்ஜ் என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டது. பல இடங்களில் மணல் அள்ளி மனுவேல் ஜார்ஜ் ‘எம்’ சாண்ட் உற்பத்தி என்ற பெயரில் அனுமதிச் சீட்டை தவறாக பயன்படுத்தி மணலை கடத்தியதாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இவ்வழக்கில் துணைத் தாசில்தார் செந்தில்வேல், மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர் முக்கூடல் சார்லஸ், ‘எம்’ சாண்ட் நிறுவன நிர்வாகி கேரளாவைச் சேர்ந்த சியாத் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார்.செந்தில்வேல் தரப்பு: கள ஆய்வு செய்யும் அதிகாரம், கடமை செந்தில்வேலுக்கு இல்லை. கனிமவள உதவி இயக்குனர் ஆய்விற்கு பின், வருவாய் ஆய்வாளர் தயாரித்த அலுவலகக் குறிப்பை சரிபார்க்க முடியும்.

‘ஸ்டாக்யார்டு’ உரிமம் வழங்கியதில் சட்டவிரோதம் இல்லை. வழக்கில் தவறாக சிக்கவைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் செந்தில்வேலுக்கு தொடர்பில்லை.தமிழக அரசு தரப்பு: 280 ஏக்கர் பட்டா நிலத்திலிருந்து பெரிய அளவில் மணல் கடத்தல் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் செந்தில்வேல் கூட்டுச் சேர்ந்து போலி ஆவணங்களை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் ‘எம்’சாண்டுக்கு அனுமதி பெற உதவியிருக்கிறார். மணல் திருட்டுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.

முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தது.நீதிபதி: விசாரணை நடக்கிறது. குற்றச்சாட்டின் தீவிரத்தன்மை மற்றும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் அளவைக் கருத்தில் கொண்டு செந்தில்வேலின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.’எம்’சாண்ட் நிறுவனத்தின் பதிவு செய்யப்படாத பங்குதாரரான சியாத் கணக்குகளை பராமரித்துள்ளர். மணலை பிரிக்கும் இயந்திரங்களை கேரளாவிற்கு கொண்டு சென்றுள்ளார். விசாரணை முடியவில்லை.

சம்பவத்திற்கு பின்புலமாக இருந்துள்ளர். அவரது தொடர்பு குறித்து குற்றம் சாட்டப்பட்ட பிரதான நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். குற்றத்தின் தீவிரத்தன்மை கருதி சியாத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.மணல் அள்ளும் இயந்திரம் மீட்கப்பட்டுள்ளது. சார்லஸ் மீதான குற்றச்சாட்டின் தன்மை கருதி முன்ஜாமின் அனுமதிக்கப்படுகிறது என்றார்.

Advertisement

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments