Friday, June 17, 2022
Homeஉலக செய்திகள்துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எப்போது முடிவு?...ஜோ பைடன் வேதனை | US Precident Joe biden speech...

துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எப்போது முடிவு?…ஜோ பைடன் வேதனை | US Precident Joe biden speech about Texas shooting

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் உயிரிழந்த நிலையில், இந்த துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு எப்போது முடிவு கட்டப்போகிறோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேதனை தெரிவித்துள்ளார்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில், 18 குழந்தைகள், 3 ஆசிரியர்கள் என 21 பேர் கொல்லப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தை ஒட்டி, அமெரிக்க தேசியக் கொடிகள் அனைத்தும் இன்று அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அமெரிக்கா: டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 18 குழந்தைகள் உட்பட 20 பேர் கொலை

இந்த படுகொலைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 2 வாரத்திற்குள் அமெரிக்காவில் நடந்த 2-வது துப்பாக்கிச்சூடு இதுவாகும். 

டோக்கியோவில் நடைபெற்ற குவாட் மாநாட்டை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இச்சம்பவம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகள் உலகின் மற்ற பகுதிகளில் அரிதாகவே நடக்கின்றன. ஆனால் நாம் இதனை ஏன் மிக சாதாரணமாகக் கடந்து செல்கிறோம்? கடவுளின் பெயரால் துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்தார்.

குழந்தையை இழப்பது என்பது ஆன்மாவின் ஒரு பகுதியை பிரித்தெடுப்பது போன்றதாகும். பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இனி பார்க்க முடியாது. அந்த பெற்றோர்களுக்கு கடவுள் மன வலிமையை வழங்க வேண்டும் எனவும் ஜோ பைடன் கூறினார். 1972-ம் ஆண்டு கார் விபத்தில் தனது முதல் மனைவி, மகளை இழந்த ஜோ பைடன், 2015-ம் ஆண்டு மகனையும் புற்றுநோயால் இழந்துள்ளார். 

அமெரிக்காவின் துப்பாக்கிச் சட்டத்தில் கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் எனவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கவேண்டும் எனவும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | அமெரிக்காவில் இனவெறி தாக்குதல்; சூப்பர் மார்கெட் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments