குடகு:குடகில் பஜ்ரங்தள் நடத்திய ‘திரிசூல் தீக் ஷா’வில், துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குடகு பொன்னம்பேட்டில் உள்ள சாய் சங்கர் கல்வி மையத்தில், பஜ்ரங்தள் சார்பில் மே 5 முதல் 11 வரை ‘திரிசூல் தீக் ஷா’ நடந்தது. இதில், பங்கேற்றவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது சமூக வலைதளத்தில் பரவியது.இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘மாநிலத்தில் உள்துறை அமைச்சர் உள்ளாரா, இல்லையா? மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க, பஜ்ரங்தள், ஸ்ரீராமசேனைக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளதா’ என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.இந்நிலையில், துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறித்து, பஜ்ரங்தள் மீது விசாரணை நடத்த வேண்டும், என குடகு மாவட்ட பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
குடகு:குடகில் பஜ்ரங்தள் நடத்திய ‘திரிசூல் தீக் ஷா’வில், துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.குடகு பொன்னம்பேட்டில் உள்ள சாய் சங்கர் கல்வி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.