ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை செய்ய வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுத்தூண் அமைக்க வேண்டும். மீண்டும் இந்த ஆலையைத் திறக்க முயற்சித்தால், இதே குமரெட்டியாபுரத்தில் மீண்டும் போராட்டத்தை துவக்குவோம்” என்றார். இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், வெளி மாவட்டத்தினர் யாரும் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை, பணியாளர்கள் குடியிருப்பு, ஆலைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதிகள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் கல்லறைகள், வீடுகள், முக்கிய சந்திப்புகள் என, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியைச் சுற்றியுள்ள 63 அரசு மதுபானக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.