Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்தூத்துக்குடி: ``ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது" - துரை வைகோ |...

தூத்துக்குடி: “ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது” – துரை வைகோ | The Tamil Nadu government is adamant on the Sterlite plant issue

தூத்துக்குடியில் ம.தி.மு.க மாநில தொண்டரணி இணைச் செயலாளர் பேச்சிராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய பின் ம.தி.மு.கவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவிலுள்ள பெரும்பாலான மின் நிலையங்கள், அனல் மின் நிலையங்களாகவே உள்ளன. அதனால், மின் உற்பத்திக்கு முக்கியத் தேவையான நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடாது என மத்தியரசு முடிவு எடுத்தது. தற்போது நிலக்கரியால் மின்பற்றாகுறை ஏற்படுகிறது என்பதை உணர்ந்து, ’கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல், தற்போது நிலக்கரி இறக்குமதி செய்யலாம் என்ற முடிவை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு காலம் கடந்தது.

செய்தியாளர் சந்திப்பில் துரை வைகோ

செய்தியாளர் சந்திப்பில் துரை வைகோ

இருந்த போதும் நிலக்கரியை கொண்டு செல்வதற்கு போதுமான சரக்கு ரயில்கள் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. மின் பற்றாக்குறை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல பல மாநிலங்களில் உள்ளது. மின் பற்றாக்குறைக்கு மத்தியரசுதான் காரணம். பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்பதுபோல் தமிழக அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். தமிழகத்தில் தற்போது காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. மின் பற்றாக்குறை இன்னும் 3 வாரத்தில் முடிவுக்கு வரலாம். தமிழகத்தில் கொரோனா உச்சம், நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments