தெற்கு சீன கடலோர பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் நடவடிக்கை கவலையளிக்கும் வகையில் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்ற கிழக்காசிய உச்சிமாநாட்டில் மத்திய வெளியுறவுறத்துறை ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தென்சீன கடல் பகுதி முழுவதையும் சீனா உரிமைக் கொண்டாடுவது ஏற்புடையது அல்ல என தெரிவித்தார். சர்வதேசச் சட்டங்கள், நாடுகளுக்கு இடையேயான பிராந்திய ஒருமைப்பாடு, இறையான்மையை மதித்து சீனா நடக்க வேண்டும் என ஜெய்சங்கர் பேசினார். தென்சீன கடல் எல்லை பிரச்சனையை எந்த நாடுகளின் நலனுக்கும் பாதகம் ஏற்படாமல், கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கையின் படி நியாயமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.