வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஐதராபாத்: தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் எனவும், ராம ராஜ்ஜியம் வந்தால் உருது மொழி தடை செய்வோம் எனவும் அம்மாநில பா.ஜ., தலைவர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற யாத்திரையில் அம்மாநில பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சய் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: மசூதி வளாகங்களில் எங்கு தோண்டினாலும் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. மாநிலத்தின் அனைத்து மசூதிகளையும் தோண்டி எடுப்போம். சிவலிங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த மசூதிகளை முஸ்லிம்கள் ஹிந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஏதேனும் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டால் அந்த இடத்தின் உரிமையை முஸ்லிம்கள் கோரலாம்.
தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும். பா.ஜ.,வும் இந்த வாக்குறுதியை கொடுத்துள்ளது. அதுபோல தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, உருது மொழிக்கு தடை விதிக்கப்படும். ‘ராம ராஜ்ஜியம்’ வந்தால் உருது மொழியை முற்றிலும் தடை செய்வோம். முஸ்லிம்களின் கல்விக்கூடமான ‘மதரஸாக்கள்’ பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக மாறியிருப்பதால் அவர்களை அடையாளம் காண வேண்டும். பா.ஜ., ஆட்சிக்கு வந்தவுடன் மாநிலத்தில் அனைத்து மதரஸாக்களும் மூடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement