Tuesday, July 5, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனைக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை - ஓலா பைக் டிரைவர்...

தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனைக்கு நள்ளிரவில் பாலியல் தொல்லை – ஓலா பைக் டிரைவர் கைது..

தேசிய மோட்டார் பந்தய வீராங்கனை நிவேதா ஜெஸிகாவிடம் நள்ளிரவில் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்த பார்ட் டைம் ஓலா பைக்  டிரைவரான சந்திரகாசன்(34) என்பவரை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கான மோட்டார் சைக்கிள் கிளப் நடத்தி வருபவர் நிவேதா ஜெஸிகா. இரண்டு முறை தேசிய மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்ற இவர் கடந்த 11 ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை காவல்துறை ட்விட்டர் பக்கத்தை இணைத்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 10 ம் தேதி இரவு அண்ணா நகரில் இருந்து வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு செல்லும் போது,  கருப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த மர்ம நபர் அசோக் பில்லர் பகுதியிலிருந்து தன்னை பின் தொடர்ந்ததாகவும்,  மேலும் அந்நபர் ஆலந்தூர் வரை தன்னை பின்தொடர்ந்து வந்ததாகவும், பின்னர் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தனது குடும்ப உறுப்பினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர், அந்த மர்ம நபர் மீண்டும் தன்னை பின் தொடர்ந்து வந்ததாகவும் இரவு ஒரு மணி அளவில் லக்கி கல்யாண மண்டபம் பகுதி கடந்து செல்லும்போது தன்னிடம் ஆபாசமாக நடந்து கொள்ள முயன்றதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனையடுத்து சென்னை காவல்துறை, நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டரில் பதில் அளித்து இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நிவேதா ஜெஸிகா ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையிலான போலீசார் மர்ம நபர் சென்ற வழிதளத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனைக்கு பாலியல் தொல்லை தர முயன்ற நபரை கைது செய்தனர்.

கைது செய்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்நபர் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன்(34) என்பதும் அவர் பாரிமுனையில் உள்ள இரும்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

மேலும், பணி நேரம் முடிந்ததும் இவர் பார்ட் டைமாக ஓலா வாடகை பைக்கில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. சம்பவத்தன்று ஓலா பைக்கில் வாடிக்கையாளர் ஒருவரை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இறக்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும்போது அசோக்நகர் அருகே நிவேதா ஜெஸிகாவை பார்த்துள்ளார். அதனால், அவரைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார் எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பார்ட் டைமாக ஓலா வாடகை பைக்கில் பணிபுரியும்போது அழகான பெண்களை பார்த்தால் துரத்திச் சென்று தனிமையான இடத்தில் பாலியல் தொல்லை செய்து வந்ததும் தெரியவந்தது. நொளம்பூர், பல்லாவரம், கிண்டி, கிழக்கு தாம்பரம் பகுதிகளில் இவர் இதே போல பல பெண்களை துரத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணமாகி எட்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் வெவ்வேறு பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்து அதில் சந்தோஷம் அடைவதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்திரகாசனிடம் ஆதம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments