கம்பம் நடப்படும் நிகழ்வைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வுகள் இன்றுமுதல் தொடங்க உள்ளன. மே 10-ம் தேதி அம்மன் மலர் விமானத்தில் வருவதல், மே 11-ம் தேதி முத்து பல்லக்கில் அம்மன் புறப்பாடு, மே 12-ம் தேதி புஷ்பப் பல்லக்கிலும் அம்மன் பவனி வரும் நிகழ்வு, மே 13 மற்றும் 16-ம் தேதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழாவின் நிறைவாக மே 17-ம் தேதி அம்மனுக்கு ஊர் பொங்கல் வைக்கப்பட்டுத் திருவிழா நிறைவுபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும், வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து செய்துள்ளனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வு இன்று தொடங்கினாலும் கம்பம் நடும் நிகழ்வு நடந்தது முதல் தேனி மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இன்று முதல் இரவு – பகலாகத் திருவிழா களைகட்டத் தொடங்கிவிடும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றியும், தீச்சட்டி மற்றும் காவடி எடுத்தும், ஆயிரம் கண்பானை மற்றும் அங்கப்பிரதட்சனம் ஆகிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றியும் அம்மனை வழிபடத் தொடங்கியுள்ளனர்.