Thursday, June 30, 2022
Homeஅரசியல் செய்திகள்தொண்டர்களை அனுப்பும் ஆம் ஆத்மி ஹிமாச்சல் சட்டசபை தேர்தலுக்கு தீவிரம்| Dinamalar

தொண்டர்களை அனுப்பும் ஆம் ஆத்மி ஹிமாச்சல் சட்டசபை தேர்தலுக்கு தீவிரம்| Dinamalar

புதுடில்லி : ஹிமாச்சல பிரதேசத்தில், ஆம் ஆத்மி மாநில தலைவர் உட்பட கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை பா.ஜ., மொத்தமாக அள்ளினாலும், அங்கு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்காக, ஆம் ஆத்மி ஆயிரக்கணக்கான தொண்டர்களை டில்லியிலிருந்து அனுப்பி வருகிறது.

ஆம் ஆத்மி, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களை குறி வைத்துள்ளது. இம்மாநிலங்களில், நவம்பர் – -டிசம்பர் மாதங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களுக்கான களப்பணியை தீவிரப்படுத்தி உள்ளது.ஹிமாச்சல பிரதேசத்தில், மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி தீர்மானித்துள்ளது. ஆனால், அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ., பெரும் பலத்துடன் இருப்பதால், ஆம் ஆத்மியை ஒருவழி செய்து வருகிறது.

பஞ்சாப் வெற்றிக்குப் பின் ஆம் ஆத்மி, ஹிமாச்சலின் மண்டி நகரில் மாபெரும் பேரணியை நடத்தியது. இதில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இருவரும் பங்கேற்றனர். ஆனால், பேரணி முடிந்த சில நாட்களிலேயே, ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் அனுாப் கேசரி, பொதுச்செயலர் சதீஷ் தாக்குர் மற்றும் மூன்று முக்கிய நிர்வாகிகள், பா.ஜ.,வில் சேர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர். மேலும், மாவட்ட அளவிலும் ஆம் ஆத்மி கட்சியினர் கொத்து கொத்தாக பா.ஜ.,வுக்கு தாவினர்.

பா.ஜ.,வின் தேசிய தலைவர் நட்டா மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் இருவருமே ஹிமாச்சல பிரசேதத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும், பா.ஜ.,வின் உயர் பொறுப்புகளில் இருப்பதால், தங்கள் மாநிலத்தில் சிறு சேதாரம் கூட ஏற்படாமலிருக்க, அதிரடி காட்டுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், ஹிமாச்சல் சட்டசபை தேர்தலுக்கு ஆம் ஆத்மி தயாராகி வருகிறது. இதற்காக, டில்லியிலிருந்து தன் கட்சித் தொண்டர்களை அங்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 1,360 தொண்டர்கள் ஹிமாச்சல பிரதேசம் சென்றுள்ளனர். இவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, 12 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றனர்; வீடு வீடாகச் சென்று, மக்களை சந்திக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவர்கள் திரும்பி வந்தவுடன், ஒரு மாதம் கழித்து, அடுத்த குழு செல்ல உள்ளது. தவிர, டில்லி மாநகராட்சியில் உள்ள 49 கவுன்சிலர்கள், முக்கிய நிர்வாகிகள் சிலரும், அடுத்தடுத்த வாரங்களில் ஹிமாச்சல பிரதேசத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments