Sunday, July 3, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்நகையுடன் எஸ்கேப்; முன்னாள் காதலனை இன்னாள் காதலன் மூலம் பழிவாங்கிய கல்லூரி மாணவி - எச்சரித்த...

நகையுடன் எஸ்கேப்; முன்னாள் காதலனை இன்னாள் காதலன் மூலம் பழிவாங்கிய கல்லூரி மாணவி – எச்சரித்த போலீஸ் | college girl warned by police, who attacked boy with the help of new boy friend

கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னை ஒரு கும்பல் தாக்கியதாக கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில், 5 பேரை கைது செய்த காவல்துறை, கல்லூரி மாணவி ஒருவரை காவல் நிலையம் அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளது. என்ன நடந்தது என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஷைஜூ(19). இவருக்கு வாகவிளையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். கடந்த ஒரு ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். மாணவி வசதியான வீட்டைச் சேர்ந்தவர் என்பதால் ஷைஜூவுக்கு விலை உயர்ந்த பரிசுகள், பாக்கெட் மணி என கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.

மாணவியிடம் பெரிதாக ஒரு தொகையை வாங்கி விட நினைத்த ஷைஜூ, தனக்கு அவசர செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூறி அவருடைய தங்கச் சங்கிலி, மோதிரம் என 4 சவரன் தங்க நகைகளை கழற்றி வாங்கியுள்ளார். அதன்பிறகு கல்லூரி மாணவியுடனான தொடர்பை துண்டித்துவிட்டாராம் ஷைஜூ. மாணவி பலமுறை செல்போனில் தொடர்புகொண்டும் ஷைஜூ தொடர்பு எல்லைக்குள் வரவே இல்லை.

கைதான இரண்டாவது காதலன் சதீஷ்குமார்

கைதான இரண்டாவது காதலன் சதீஷ்குமார்

இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கருங்கல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மற்றொரு வாலிபருடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருப்பினும், தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலன் மீதான கோபம் அந்த மாணவியின் மனதுக்குள் கனன்றுகொண்டு இருந்திருக்கிறது. எனவே, புதிய காதலன் சதீஷ்குமார் மூலம் பழிவாங்க முடிவு செய்தார் மாணவி. தனக்கு ஷைஜூ என்ற நண்பன் இருந்ததாகவும், அவன் 4 பவுன் நகையை பறித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments