புதுடில்லி: சீனாவின் ஹாங்சு நகரில் வரும் செப். 10–25 ஆசிய விளையாட்டு நடக்கவுள்ளது. இதனிடையே இங்குள்ள முக்கியமான ஷாங்காய் நகரம், கொரோனா பரவலால் ‘லாக் டவுனில்’ உள்ளது. தவிர தலைநகர் பீஜிங்கிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆசிய விளையாட்டு தள்ளி வைக்கப்படும் என செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியது:
சீனாவில் என்ன சூழல் நிலவுகிறது, சீனா என்ன சொல்லப் போகிறது என்பது தான் இப்போதைக்கு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போட்டியில் பங்கேற்கவுள்ள நாடுகள் ஆலோசித்து வருகின்றன. இந்தியாவும் விரைவில் முடிவெடுக்கும். இதற்கு முன் போட்டியை நடத்தும் சீனா எந்தளவுக்கு தயாராக உள்ளது, என்ன நினைக்கிறது என தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement