எனக்கு மூணு பசங்க இருக்காங்க. பத்து வருஷம் நானும், என் கணவரும் சேர்ந்து வாழ்ந்தோம். பிறகு, என் பசங்களை கூட்டிட்டு தனியா வந்துட்டேன். பசங்களுக்காகவே வாழ ஆரம்பிச்சேன். ஆச்சி மசாலா கம்பெனியில் HR ஆக வேலை பார்த்தேன். அங்கே இருக்கும்போதே விளம்பர படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.
திடீர்னு ஒரு நாள் விஜய் டிவியில் இருந்து போன் பண்ணி ஒரு சீரியலுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் இருக்கான்னு கேட்டாங்க. என் பசங்ககிட்ட அதுபற்றி கேட்டதுக்கு உனக்கு ஓகேன்னா பண்ணும்மான்னு சொன்னாங்க. சரின்னு ஆச்சி மசாலாவில் பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டு முன் பின் அறிமுகம் இல்லாத ஆக்டிங் துறைக்குள் வந்தேன்.