Sunday, July 3, 2022
Homeசினிமா செய்திகள்``நம்முடைய பிரச்சனையே..." தன்னுடைய மகள் குறித்து மனம் திறந்த நடிகர் அஜய் தேவ்கன்! | Ajay...

“நம்முடைய பிரச்சனையே…” தன்னுடைய மகள் குறித்து மனம் திறந்த நடிகர் அஜய் தேவ்கன்! | Ajay Devgn on his daughter Nysa Bollywood debut

அஜய் தேவ்கன் 30 வருடங்களுக்கு மேலாக பாலிவுட்டில் நடித்து வருபவர். இவர் திரைப்பட இயக்குனரும் கூட. Runway 34 என்கிற படத்தை சமீபத்தில் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங் உடன் அஜய் தேவ்கனும் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார். இதற்கான ப்ரோமோஷனில் இருக்கும் அஜய் தன் மகள் நடிக்க வருவதைப் பற்றியும் பேசியுள்ளார். அஜய் தேவ்கன்- கஜோல் இணையரின் மகள் நைஸா தேவ்கன் (Nysa Devgn). நைஸாவின் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டிவிட்டது. நைஸா நடிக்க வருவாரா என்கிற கேள்விக்கு அஜய், “என் மகளை மறந்துவிடுங்கள்… எனக்கு தெரியவில்லை அவர் நடிக்க வருவாரா என்பது. இப்போதைக்கு வரைக்கும் நடிப்பில் ஆர்வமில்லாமல் தான் இருக்கிறாள். குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடியவர்கள். இப்போது வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

அஜய் தேவ்கன் குடும்பத்துடன்

அஜய் தேவ்கன் குடும்பத்துடன்

நைஸா சுவிர்சலாந்து பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார். இவரது புகைப்படங்கள் அவ்வவ்போது இணையத்தில் வைரலாகும். இவருக்கு சமூக வலைதளத்தில் ரசிகர் பக்கங்களும் உண்டு.

அஜய் தேவ்கன் இன்றைக்கு நடிக்க வருபவர்களை பற்றி, “இன்றைய தலைமுறைக்கு எப்படி பேசணும், எப்படி நடந்துக்கணும், எவ்வாறு சமூக வலைதளங்களை கையாளணும் என்பது தெரிந்திருக்கிறது. நம்முடைய பிரச்னை கனெக்டட் ஆக இருப்பதற்கு அவர்களோடு போட்டியிடுகிறோம்” என்று தெரிவித்து இருக்கிறார். Runway 34 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 2015 டோஹா-கொச்சி இடையேயான விமானம் மோசமான வானிலையால் எதிர்கொண்ட உண்மையான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments