Thursday, June 30, 2022
Homeசினிமா செய்திகள்நலன் செம நச், கௌதமும் கூல்... ஆனால், வெங்கட் பிரபு, விஜய்?! `குட்டி ஸ்டோரி' -...

நலன் செம நச், கௌதமும் கூல்… ஆனால், வெங்கட் பிரபு, விஜய்?! `குட்டி ஸ்டோரி’ – ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட் | Kutti Story Tamil Anthology Movie Review

வயிற்றில் வளரும் கரு எனும் சென்சிட்டிவான டாப்பிக்கை ‘தியா’வுக்குப் பின்னர் மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். எதிர்பாரா தருணமொன்றில் கருவுறுகிறார் மேகா ஆகாஷ். கல்லூரி வாழ்க்கை குறுக்கே நிற்க, பின் என்ன முடிவெடுக்கிறார் எனச் சொல்கிறது ‘அவனும் நானும்’. ‘ஒரு பக்க கதை’ படத்தைப் போலவே, மேகா ஆகாஷுக்கு மீண்டும் ஒரு வேடம். ஆனால், அதிலிருந்த எந்த யதார்த்த நடிப்பும் இதில் இல்லை. அந்தச் சூழலில் இருக்கும் ஒரு பெண் குழப்பமான மனநிலையில் இருப்பது இயற்கை. ஆனால், இங்கே படைப்பாளிக்கே குழப்பமான மனநிலைதான் இருக்கிறது.

அவனும் நானும் | குட்டி ஸ்டோரி

அவனும் நானும் | குட்டி ஸ்டோரி

குழந்தை இல்லாமல் இருப்பவர்கள், மரணம், தத்தெடுத்தல் என என்னவெல்லாமோ பேசி குழப்பியடிக்கிறது கதை. அதிலும், சம்பந்தப்பட்ட பெண் முடிவெடுப்பதுபோல காட்சிகள் அமைக்காமல் மற்றவர்களின் நிர்பந்தத்தின் பேரிலேயே முடிவுகள் எடுப்பதாகக் காட்டி, அதையும் நியாயப்படுத்த முயற்சி செய்திருப்பது ஆபத்தான அரசியல் பார்வை. சினிமா என்பது நாம் வாழும் சூழலுக்கு ஏற்ப, ஃபேன்டஸி உலகிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து யதார்த்தம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை மீண்டும் பழைய கிளேஷக்களுக்குள் தள்ளுகிறது ‘அவனும் நானும்’.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments