வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‛இந்நிய நாட்டில் தற்போது நிலைமை சரியானதாக இல்லை. நல்லநாள் விரைவில் வரும்’ என பேசினார்.
உலகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கான முஸ்லிம் மக்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேற்குவங்கத்தில் மாநில அரசு சார்பில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோல்கட்டாவில் ரெட் ரோடு பகுதியில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து பேசியதாவது:
இந்நிய நாட்டில் தற்போது நிலைமை சரியானதாக இல்லை. நீங்கள் பயப்பட வேண்டாம். போராட வேண்டும். சமாதானம் பற்றி பேசி ஒன்றிணைந்து போராட வேண்டும். நல்லநாள் விரைவில் வரும். மேற்கு வங்கத்தில் அனைத்து மக்களிடையே மிக உயர்ந்த ஒற்றுமை உள்ளது. நாட்டில் பிரித்தாளும் கொள்கையை மையப்படுத்தி தனிமைப்படுத்தும் நோக்கிலான அரசியல் நடக்கிறது. இது நாட்டுக்கு நல்லது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement