ஹாங்காங்கில் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையில் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரியின் கட்டுரை வெளியாகியுள்ளது.
அந்தக் கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் இந்தியாவை வலிமையாக்கியுள்ளது. சுய ஆற்றல் மூலம் கொரோனாவை எதிர்கொள்ளவும், கொரோனாவினால் கஷ்டப்படும் உலக நாடுகளுக்கு உதவி புரிந்து நல்ல பெயர் எடுக்கவும் முடிந்துள்ளது.
கொரொனா மூலம் இந்தியாவின் ஆற்றல் உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் மருந்துகள், மருத்துவ சாதனங்களுக்கான தேவை பெருகிய போது இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து உதவியது.
வர்த்தகம் முதலீடு பாதிக்கப்பட்ட போது தற்சார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்தது. கொரோனா பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போதிலும் அதிலிருந்து மீள்வதே ஒரே குறிக்கோள் என்று இல்லாமல் வாய்ப்பை பயன்படுத்தி கல்வி, தயாரிப்பு, வேளாண் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டது.
2020-ன் சவால்கள் இன்னமும் நிறைவு பெறவில்லை. இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. அமைதி, வளர்ச்சி, கூட்டுறவை வளர்க்க இந்தியா பாடுபடும்.
என்று அந்தக் கட்டுரையில் மிஸ்ரி பெருமையாகப் பேசியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.