“நான் சற்று வித்தியாசமான படைப்பு… இனி ஓய்வெடுக்கப் போவதில்லை..!” – பிரதமர் மோடி | A Senior Opposition leader told me becoming PM twice is enough says, PM Modi

குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலமாக பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவரை நான் சந்தித்தேன். அவர் அரசியல் ரீதியாக என்னை எதிர்த்தாலும், நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இன்னொரு நாள் அவர் என்னைச் சந்தித்து சில பிரச்னைகள் பற்றி பேச வந்தார். அப்போது அவர் என்னை பார்த்து, `நாடு உங்களை இரண்டு முறை பிரதமராக்கியிருக்கிறது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்’ எனக் கேட்டார். ஒருவர் இரண்டு முறை பிரதமராக பொறுப்பு வகித்தால், அவர் அனைத்தையும் சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மோடி சற்று வித்தியாசமான படைப்பு என்பது அவருக்குத் தெரியாது. இனிமேல் நான் ஓய்வெடுக்கலாம் என நினைக்கவில்லை. மக்களுக்கான நலத்திட்டங்கள் 100 சதவிகிதம் அவர்களை சென்றடைவதை உறுதி செய்வதே எனது கனவு” என்றார்.

Source link

Leave a Comment

Your email address will not be published.