Thursday, June 30, 2022
Homeதமிழக சிறப்புச் செய்திகள்``நான் செத்துட்டா போலீஸ் யூனிஃபார்ம் போட்டு விடுங்க!” - சடலமாக தொங்கிய மாணவியின் உருக்கமான கடிதம்...

“நான் செத்துட்டா போலீஸ் யூனிஃபார்ம் போட்டு விடுங்க!” – சடலமாக தொங்கிய மாணவியின் உருக்கமான கடிதம் | In Cuddalore, a heartfelt letter by the college student who was committed suicide because of exam fear

கடலூர், செம்மண்டலத்தில் இயங்கிவருகிறது கந்தசாமி நாயுடு மகளிர் கலை அறிவியல் கல்லூரி. அந்த கல்லூரியின் ஊழியர் ஒருவர் இன்று காலை கல்லூரிக்கு சென்றபோது, மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதையடுத்து கல்லூரியின் நிர்வாகத்துக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்திருக்கிறார். உடனே அங்கு விரைந்த புதுநகர் போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அந்த மாணவி விழுப்புரம் மாவட்டம், சின்னபாபுசமுத்திரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரது மகள் தனலட்சுமி என்பதும், அந்த கல்லூரிக்கு அருகிலிருக்கும் அரசு விடுதியில் தங்கி வணிகவியல் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. மேலும் சனி, ஞாயிறு விடுமுறைக்காக வீட்டுக்கு சென்ற மாணவி தனலட்சுமியை நேற்று 16-ம் தேதி மாலை விடுதியில் விட்டிருக்கிறார் அவரது தந்தை நாகலிங்கம். இந்நிலையில்தான் இன்று காலை தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார் மாணவி தனலட்சுமி.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments