Wednesday, July 13, 2022
Homeஅரசியல் செய்திகள்நாளை சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்: சென்னை கலைவாணர் அரங்கில் உணவுப் பொருள்கள் கண்காட்சி!|Food exhibition...

நாளை சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்: சென்னை கலைவாணர் அரங்கில் உணவுப் பொருள்கள் கண்காட்சி!|Food exhibition at Kalaivanar Arangam as part of International Biodiversity Day

ஆண்டுதோறும் மே 22 -ம் தேதி அன்று சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம் கொண்டாடப்படுகிறது. பூமியில் வாழும் பல்வேறுபட்ட உயிரினங்கள் அனைத்தும் சுற்றுச்சூழலின் ஒரு அங்கமாக விளங்குகிறது. இவ்வுயிரிகளின் பெருக்கமும் பூமிக்கு இன்றியமையாத தேவையாக உள்ளது. எனவே, பல்லுயிரிகளின் பெருக்கம் குறித்த தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சி அறிவிப்பு

நிகழ்ச்சி அறிவிப்பு

இந்நிலையில், வரும் சர்வதேச பல்லுயிர் பெருக்க தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் உணவுப் பொருள்கள் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தின் தலைவர் டாக்டர் மாத்தூர், செயலாளர் ஜெ. ஜஸ்டின் ஆகியோர் பேசும்போது, “சுமார் 25 மாநிலங்கள் பங்கேற்கும் இந்தக் கண்காட்சியில் 50 அரங்குகளில் பல்வேறு மாநிலங்களின் உள்ளூர் உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்படும். இக்கண்காட்சியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைப்பார். மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ வி.மெய்யநாதன் அவர்களும் கலந்துகொள்கிறார். தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ஏற்பாடு செய்யும் இந்தக் கண்காட்சியை பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது மக்கள் சென்று பார்வையிடலாம்.

தேசிய அளவிலான நிகழ்ச்சிகள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், இந்த ஆண்டின் மையப்பொருள் `அனைத்து உயிர்களுக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்துக்கான கட்டமைப்பு’ என்பதாகும். அதுமட்டுமல்லாமல் கடந்த ஒரு மாத காலமாக 16,000 பேர் பங்கேற்ற முழக்கம் எழுத்தும் போட்டியின் இறுதி முடிவுகள் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட உள்ளது. அதோடு பல்லுயிர் பெருக்கம் குறித்த சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments