Friday, July 8, 2022
Homeசினிமா செய்திகள்நிக் ஜோனஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்; பிரியங்கா சோப்ராவின் ரியாக்ஷன்! | Priyanka Chopra calls...

நிக் ஜோனஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்; பிரியங்கா சோப்ராவின் ரியாக்ஷன்! | Priyanka Chopra calls Nick Jonas ‘best husband ever’ as he gifts her customized car

பிரியங்கா சோப்ரா ‘Citadel’ வெப் சீரிஸில் பரபரப்பாக நடித்து கொண்டிருக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகி வரும் ‘Citadel’ வெப் தொடரில் ‘எடர்னல்ஸ்’ பட ஹீரோ ரிச்சர்ட் மேடன் உடன் நடித்து வருகிறார் பிரியங்கா. சூட்டிங் டஃப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில் பிரியங்காவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்து அசத்தியிருக்கிறார் அவரது கணவர் நிக் ஜோனஸ்.

இந்தச் செய்தியைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பிரியங்கா அதில், “இதுதான் ஒரு தரமான ரைடு… நன்றி, நிக் ஜோனஸ். எப்போதும் எனக்கு உதவி செய்து கொண்டிருப்பதற்கு!” என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். ‘சிறந்த கணவர்’ என்கிற ஹேஷ்டேக்கையும் சேர்த்து அந்த காரை ஓட்டுவது போலான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். அந்த காரின் பக்கவாட்டில் Mrs.Jonas என எழுதப்பட்டுள்ளது.

அப்படி நிக் ஜோனஸ் பிரியங்காவுக்கு பரிசளித்திருப்பது ஒரு கார். கடற்கரை மணல், சகதி, ஆன் ரோடு இப்படி எல்லா நிலப்பரப்புகளிலும் ஓட்டக் கூடிய All Terrain Vehicle மாடல் கார் ஒன்றை பிரியங்காவுக்கு பரிசளித்திருக்கிறார் நிக்.

வாடகை தாய் முறையில் நிக் ஜோனஸ் – பிரியங்கா இணையருக்கு பிறந்த மகள் ‘Malti Marie’ 100 நாள்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதை சமீபத்தில்தான் இருவரும் இணைந்து கொண்டாடியிருந்தனர்.

‘The Matrix Resurrections’ படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அதற்கடுத்து ‘Citadel’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. It’s All Coming Back to Me மற்றும் Jee Le Zaraa ஆகிய படங்கள் லைன்-அப்பில் இருக்கின்றன.

Source link

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments